உலகின் தலைசிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூரின் 'எஸ்ஐஏ' அறிவிப்பு

1 mins read
034aae89-be92-4f3d-8996-76f1d2a23e63
-

உலகின் தலைசிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூர் ஏர் லைன்சை (எஸ்ஐஏ), புகழ்பெற்ற 'டிரிப்அட்வைசர்' பயண இணையத்தளம் அறிவித்துள்ளது. ஆசியாவின் சிறந்த விமான நிறுவனம், உலகில் மற்றும் ஆசியா வில் சிறந்த அனைத்துலக முதல் வகுப்பு பயணங்களை வழங்கும் நிறுவனம், உலகில் மற்றும் ஆசியாவில் சிறந்த சிக்கன வகுப்புப் பயணங்களை வழங்கும் நிறுவனம், ஆசியப் பயணிகளின் விருப்பத் தேர்வாக வர்த்தகப் பிரிவு பயணத்தை வழங்கும் நிறு வனம், ஆசியாவின் தனிச்சிறப் பான சிக்கன 'பிரிமியம்' பயணத் துக்கு பயணிகளின் தேர்வாக விளங்கும் நிறுவனம் ஆகிய விருதுகளையும் தேசிய நிறுவன மான 'எஸ்ஐஏ' வென்றுள்ளது.

உலகம் முழுவதும் பயணம் செய்யும் பயணிகளின் மதிப்புரைகளை அடிப்படையாகக் கொண்டு சுற்றுப்பயணிகளுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும் விமான நிறுவனங்களை 'டிரிப்அட் வைசர்' பட்டியலிட்டுள்ளது. விமான நிறு வனங்களின் சேவை, தரம், மதிப்பு ஆகியவை ஆய்வில் ஆராயப் பட்டன. சிறந்த விமான நிறுவன மாக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்துப் பேசிய 'எஸ்ஐஏ'யின் தலைமை நிர்வாகியான கோ சூன் போங், "உலகம் முழுவதும் உள்ள எஸ்ஐ ஏயின் ஆயிரக்கணக்கான ஊழியர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்புக்குக் கிடைத்த மதிப்பு இது," என்றார். "சிங்கப்பூர் ஏர்லைன்சின் ஊழி யர்கள், நாள்தோறும் பயணிகளின் தேவைகளில் கவனம் செலுத்தி உலக அளவில் போட்டித் திறன் மிக்க நிறுவனமாக திகழச் செய் துள்ளனர்," என்றும் அவர் கூறினார். உலகின் சிறந்த நிறு வனமான எஸ்ஐஏ தேர்வு பெறுவது இது முதல் முறையல்ல.