தாராளமயமான உலகளாவிய வர்த்தகத்துக்கு தலைவர்கள் ஆதரவு

1 mins read
8de265a4-7d62-4c19-976e-5505c1c42cfd
-

பிரதமர் லீ சியன் லூங், சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர் தாராளமயமான உலகளாவிய வர்த்தகத்துக்கான ஆதரவைத் தெரிவித்துள்ளனர். வர்த்தகப் பூசல்களுக்கு உலக வர்த்தக அமைப்பின் பணிச்சட்டத் துக்கு உட்பட்டு தீர்வுகாண வேண்டும் எனவும் இரு தலைவர் களும் குறிப்பிட்டனர். விதிமுறைகள் அடிப்படையி லான பலதரப்பு வர்த்தக அமைப்பு சிறிய, பெரிய நாடுகளுக்கு நல்ல பயனளித்துள்ளது. இரு நாட்டுத் தலைவர்களும் சீனாவின் பாவோ நகரில் நடைபெறும் ஆசியா வருடாந்திர மாநாட்டிற்கு இடையிலான கலந்துரையாடலின்போது இந்தக் கருத்துகளைப் பரிமாறிக்கொண் டனர்.

பாவோ மாநாட்டில் முதல் முறையாகக் கலந்துகொள்ளும் திரு லீ முன்னதாக மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் உரை யாற்றியபோது அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் பூசல் அதிகரித்துவரும் வேளையில் சிறிய, பெரிய நாடுகளின் மீது வர்த்தக வரி மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.

சீனாவின் பாவோ நகரில் சீன அதிபர் ஸி ஜின்பிங் உடன் பிரதமர் லீ சியன் லூங் (இடது). படம்: சாவ் பாவ்