தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிராப்- ஊபர் இணைப்பைத் தடுக்க தற்காலிக நடவடிக்கைகள்

2 mins read
8e796719-b80b-4f73-a7ee-284c8d9d800b
-

சிங்கப்பூரில் ஊபர் நிறுவனத்தின் தொழில் உரிமையை கிராப் நிறுவனம் எடுத்துக்கொள்வதைத் தடுத்து நிறுத்துவதற்கான இடைக் கால நடவடிக்கைகளை சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் பிறப்பித்துள்ளது. அமெரிக்காவின் ஊபர் நிறு வனத்தின் தென்கிழக்கு ஆசிய தொழில் உரிமையை கிராப் நிறு வனம் கையகப்படுத்துவது பற்றி தான் நடத்தும் புலன்விசாரணை முடியும் வரை இந்த இடைக்கால நடவடிக்கைகள் நடப்பிலிருக்கும் என்று அறிக்கை மூலம் ஆணையம் நேற்று தெரிவித்தது.

சந்தையைத் திறந்துவைத்தி ருக்கவும் போட்டித்தன்மையுடன் சந்தை திகழ்வதை உறுதிப்படுத்த வும் இந்த இடைக்கால நடவடிக் கைகள் இடம்பெறுவதாக ஆணை யம் தெரிவித்துள்ளது. ஊபர் நிறுவனத்தின் செயல் முறைத் தகவல்களைப் பயன் படுத்தி, தன் சந்தை நிலையை கிராப் பயன்படுத்திக்கொள்ள முடி யாமல் செய்வது, இந்தக் கொள் முதலுக்கு முந்தைய கட்டணங் களையும் வாகன ஓட்டுநர்களுக் கான தரகுகளையும் தக்கவைத் துக்கொள்வது முதலானவை ஆணையத்தின் தற்காலிக நட வடிக்கைகளில் சிலவாகும்.

இந்த ஆணையம் தன்னுடைய புலன்விசாரணையை எப்போது நடத்தி முடிக்கும் என்பதைத் தெரிவிக்கவில்லை. இருந்தாலும் ஊபர் தளம் மே 7ஆம் தேதி முடிவுக்கு வரும் என்று ஆணையம் குறிப்பிட் டது. அதுவரையில் ஊபர் பயனீட் டாளர்களுக்குத் தேவையான வாடிக்கையாளர் ஆதரவு வழங்கப் படவேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

ஊபர், கிராப் ஆகிய இரு நிறுவனங்களும் ஒன்று மற்றொன் றின் அணுக்கமான போட்டி நிறு வனங்களாக இருக்கின்றன. சந்தையில் இவை இரண்டும் கணிசமான அளவுக்குப் பங்கைக் கொண்டுள்ளன என்பதால் இந்த இடைக்கால நடவடிக்கைகள் தேவைப்படுவதாக ஆணையப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, ஆணையத்தின் அறிக்கையைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நிலப் போக்கு வரத்து ஆணையம், இடைக்கால நடவடிக்கைகளைத் தான் ஆதரிப்ப தாகக் குறிப்பிட்டது. 2018-04-14 06:00:00 +0800