தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழை ரசிக்க செய்த நகைச்சுவை பயிலரங்கு

1 mins read
90050c7e-83a7-45b1-9887-d98234abef13
-

தமிழ்மொழி விழாவின் ஓர் அங்கமாக கடந்த எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை, இந்திய மரபு டைமை நிலையம் ஒரு நகைச் சுவைப் பயிலரங்குக்கு எற்பாடு செய்திருந்தது. நகைச்சுவையின் பல நுணுக் கங்களைக் கற்றுக்கொள்வதோடு பங்கேற்பாளர்களை இயல்பான பேச்சுத் தமிழில் கலந்துரையாட வைப்பதே இப்பயிலரங்கின் நோக்கமாகும். இந்த நகைச்சுவை பயிலரங்கை அவாண்ட் நாடகக் குழு வழி நடத் தியது.

இளையர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், சுற்றுலா வழிக்காட்டி கள், வெளிநாட்டு ஊழியர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள், சிங்கப்பூரர்கள் என பலர் ஆர்வ மாகக் கலந்துகொண்டனர். தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும் தமிழில் பேசும் வாய்ப்பைப் பெறவும் இந்தப் பயில ரங்கிற்கு வந்திருப்பதாக பங்கேற் பாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார். தமிழ்மொழி கற்றல் என்றாலே அது சிரமமானது என்ற எண்ணம் சிலருக்கு உண்டு. கடினமான புத்தகங்கள், இலக்கியங்கள் படிப்பதனால் மட்டுமே மொழித் திறனை வளர்த்துக்கொள்ள முடியும் என்பது பலரது எண்ண மாக இருந்தது. இதனை மாற்றும் நோக்கத்தில் இயல்பான முறையில் நகைச் சுவையான நடவடிக்கைகள் நடத் தப்பட்டதின் மூலம் தமிழை ரசிக்க முடிந்ததாகப் பங்கேற் பாளர்கள் தெரிவித்தனர்.

நகைச்சுவைப் பயிலரங்கில் ஆர்வத்துடன் பங்கேற்றவர்களில் சிலர். படம்: இந்திய மரபுடைமை நிலையம்