பொருளியல் உருமாற்றத்தின் அடுத்த கட்டத்தில் உலக ஆசிய மையப்புள்ளியாக சிங்கப்பூர்

பொருளியல் உருமாற்றத்தின் அடுத்த கட்டத்தில் உலக ஆசிய மையப்புள்ளியாக சிங்கப்பூர்

2 mins read
7de8a380-552e-419e-af8e-e10b70d18817
-

பொருளியலைத் தூக்கிவிடத் துணைபுரியும் தொழிற்துறை களைக் குழுக்களாக ஒன்றி ணைத்து அவற்றுக்கிடையிலான உறவை வலுப்படுத்துவதே சிங் கப்பூர் பொருளியல் உருமாற்றத் தின் அடுத்த கட்டம் என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து உள்ளார். ஆசியாவிலும் உலகளவிலும் தொழில்நுட்பம், புத்தாக்கம், நிறு வனமயம் ஆகியவற்றுக்கான முக் கியதொரு மையப்புள்ளியாக சிங் கப்பூரை நிலைநிறுத்துவதே உரு மாற்றத்தின் நோக்கம் என் றார் அவர். முக்கிய தொழில் நிறு வனங்களுக்கான துறை ரீதியான எல்லா திட்டங்களும் வகுக்கப்பட் டுள்ள நிலையில் அந்த 23 துறை களும் 6 குழுக்களாக இணைக் கப்படும் என்றும் ஒன் றிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கவே இந்த ஏற்பாடு என்றும் திரு ஹெங் குறிப்பிட்டார்.

அந்த ஆறு குழுக்கள் ஒவ் வொன்றும் ஓர் அமைச்சரின்கீழ் அமைவதோடு குறைந்தபட்சம் ஒரு தனியார் துறை பிரதிநிதி அல்லது தொழிற்சங்கப் பிரதிநிதி அதில் இடம்பெற்றிருப்பார். துறை களின் மேற்பார்வையின்கீழ் புத் தாக்கத்தை வளர்க்கவும் திறன் களை வலுப்படுத்தவும் பங்காளித் துவத்தை ஊக்கப்படுத்தவும் உதவும் திட்டங்கள் வருகிற மாதங்களில் வெளியிடப்படும் என்றார் நிதி அமைச்சர்.

செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அவர், ஆறு தொழிற்துறைக் குழுக்களின் விவரங்களை வெளி யிட்டார். உற்பத்தித் துறை, (மனி தனால்) உருவாக்கப்பட்ட சுற்றுச் சூழல், வர்த்தகமும் இணைப்பும், அத்தியாவசிய உள்நாட்டுச் சேவை கள், நவீன சேவைகள், வாழ்க்கை முறை ஆகியன அந்தக் குழுக் கள். வர்த்தக தொழில், தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் இடம்பெற்றிருக்கும் உற்பத்தித் துறை எரிசக்தி, ரசா யனத் துறை, துல்லிய பொருளி யல் துறை, கடல் மற்றும் கடல்சார் துறை, வான்வெளித் துறை, மின் னணுத் துறை போன்றவற்றை உள்ளடக்கி இருக்கும்.

(மனிதனால்) உருவாக்கப்பட்ட சுற்றுச்சூழல் குழுவில் தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் டெஸ்மண்ட் லீ இருப்பார். கட்டு மானத் துறை, சொத்துச் சந்தை, சுற்றுப்புறச் சேவைத் துறை (துப்புரவு, கழிவு நிர்வாகம்), பாது காப்புத் துறை ஆகியவற்றை இக்குழு உள்ளடக்கும். ஆகாய போக்குவரத்துத் துறை, கடல் போக்குவரத்துத் துறை, நிலப்போக்குவரத்துத் துறை, மொத்த விற்பனைத் துறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக வர்த்தகமும் இணைப்பும் என்ற குழு இருக்கும். இதில் வர்த்தக தொழில், தேசிய வளர்ச்சி மூத்த துணை அமைச்சர் கோ போ கூன் இடம்பெற்றிருப்பார்.

அத்தியாவசிய உள்நாட்டுச் சேவைகள் குழுவில் தொடர்பு தகவல், சுகாதார மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் இடம் பெற்றிருப்பார். சுகாதாரப் பரா மரிப்புத் துறை, கல்வித் துறை (ஆரம்பகாலப் பிள்ளைப் பருவம், பெரியோருக்கான பயிற்சியும் கல் வியும்) ஆகியன இக்குழுவில் இருக்கும்.