விமான விபத்தில் பெண் மாண்ட விதம் குறித்து பயணிகள் அதிர்ச்சித் தகவல்

விமான விபத்தில் பெண் மாண்ட விதம் குறித்து பயணிகள் அதிர்ச்சித் தகவல்

1 mins read
79425e24-45ad-473f-aab0-795c9ce262d5
-

அமெரிக்காவில் பதிவு செய் யப்பட்ட சௌத்வெஸ்ட் ஏர் லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் விபத்தில் சிக்கி யதைத் தொடர்ந்து அதன் நிர்வாகம் சோதனைகளை அதிகப்படுத்தி வருகிறது. பென்சில்வேனியா நக ருக்கு மேல் சுமார் 32,500 அடி உயரத்தில் நேற்று முன் தினம் பறந்துகொண்டிருந்த போது அந்த விமானத்தின் இயந்திரத்தில் வெடிப்பு ஏற் பட்டது. அப்போது அந்த விமானத் தில் 149 பேர் இருந்தனர். டாலஸ் நகரில் இருந்து நியூ யார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தை நோக்கி அந்த விமானம் சென்றுகொண்டி ருந்தது. இயந்திரம் வெடித்த நேரத் தில் பெண் பயணி ஒருவர் பாதியளவு வெளியே இழுக்கப்பட்டு மாண்டார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் அமெ ரிக்க விமானம் ஒன்றின் விபத்தில் நிகழ்ந்த முதல் மரணச் சம்பவம் இது. சன்னல் உடைந்து சிதறி யதால் விமானத்தினுள் காற்ற ழுத்தம் குறைந்து அந்தப் பெண் வேகமாக வெளியே இழுக்கப்பட்டார். பதறிப்போன மற்ற பயணிகள் அவரை உள்நோக்கி இழுத்தனர். "என்ன நிகழப்போகிறதோ என்று நாங்கள் ஒவ்வொரு வரும் பீதியில் அலறினோம். பொருட்கள் எல்லாம் சன்னல் ஓட்டை வழியே வெளியில் பறந்தன," என்று உயிர்தப்பிய மார்ட்டி மார்ட்டினெஸ் என் னும் பயணி தெரிவித்தார். "சன்னல் ஓரம் அமர்ந்தி ருந்த பெண் சன்னலுக்கு வெளியே இழுக்கப்பட்டார். ஆடவர் ஒருவர் ஓடிச் சென்று அந்தப் பெண்ணை விமானத் தினுள் இழுத்தார். அவர் ஒருவரால் அந்தப் பெண்ணை உள்ளே கொண்டு வரமுடிய வில்லை.