சிங்கப்பூர் குடியரசு கடற்படையின் 180வது படைப்பிரிவைச் சேர்ந்த வீரர்கள் சிறிய குழுக்களாக கப் பல்களுக்குள் சென்று பாதுகாப்பை உறுதி செய்துவருகின்றனர். அந்தக் கப்பல்கள் கடற்கொள் ளையர்கள் அல்லது பயங்கரவாதி களின் ஆதிக்கத்தில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதே அவர்களின் நோக்கம். முழு சீருடையுடன் உள்ள அப்படைப்பிரிவினர் பல்வேறு ஆயுதங்களை ஏந்தி முழு தயார் நிலையில் இருப்பார்கள். "ஒரு கப்பலில் ஏறும்போதும் எங்களால் எங்கும் ஓடமுடியாது. வெளியிலிருந்து உதவி வரும்வரை யில் எங்களை நாங்களே தற்காத் துக்கொள்ள வேண்டும்," என்று அப்படைப்பிரிவின் தலைவர் லெஃப்டினென்ட் கர்னல் நிக் நியோ கூறினார்.
தனது படைப்பிரிவில் உள்ள அனைத்து அதிகாரிகளும் அந்த இக்கட்டான சூழ்நிலைக்குத் தயா ராக இருப்பதாக அவர் தெரி வித்தார். தற்காப்பு இரண்டாம் அமைச்சர் ஓங் யி காங், தற்காப்பு சமூக உறவுகளுக்கான ஆலோசனை மன்றத்துடன் பிரானி தீவுக்கு நேற்று சென்றிருந்தபோது 180வது படைப்பிரிவின் பணி பற்றிய விவரங்கள் தெரியவந்தன. 50 அதிகாரிகள் கொண்ட படைப்பிரிவினர் சென்ற ஆண்டில் சிங்கப்பூர் கடற்பகுதிக்கு வந்த 585 கப்பல்களில் அதிரடிச் சோத னைகள் நடத்தியுள்ளனர்.
கடற்பகுதியில் பாதுகாப்பு நடவ டிக்கைகளை ஒருங்கிணைக்கும் கடற்துறை பாதுகாப்புப் பணிக்குழு முதலில் எந்தெந்த கப்பல்களைச் சோதனை செய்யவேண்டும் என்பதை அடையாளம் காணும். கப்பல் ஏற்றிவரும் பொருட்கள், கப்பல் ஊழியர்கள், செல்லும் இடம் ஆகியவற்றைக் கொண்டு அந்த முடிவு எடுக்கப்படும். ஆறு மணி நேரத்திற்கு முன்னர் பணிக்குழு படைப்பிரிவி டமும் கப்பலிடமும் தெரிவித்து விடும். நான்கு முதல் எட்டு அதிகாரிகள் கப்பலுக்குள் அனுப் பப்பட்டு சோதனைகளை மேற் கொள்வார்கள்.
கடல்வழி வர்த்தகத்தை அதிகளவில் சார்ந்துள்ள சிங்கப்பூர், அதன் கடற்பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில் விவேகத்துடன் செயல்படுகிறது. அதன் ஓர் அம்சமாக கடற்துறையின் 180வது படைப்பிரிவினர் அதிரடிச் சோதனைகளை நடத்திவருகின்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

