ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் ஒருவர் பலி

1 mins read
f778ccb6-04ad-47c2-b47d-fb3df7ebcf08
-

இந்தோனீசியாவின் மத்திய சுலவேசி மாநிலத்தில் நேற்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஒருவர் மாண்டுபோனார்; சீன நாட்டவர் அறுவர் உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர். பிடி ஐஎம்ஐபி என்ற நிறுவனத் திற்குச் சொந்தமான அந்த ஹெலி காப்டர் கிளம்பிய சிறிது நேரத்தில் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது. ஹெலிகாப்டர் தரையிறங்க முற் பட்டபோது கீழே நின்றிருந்த இரு ஊழியர்கள் மீது மோதியதாகவும் அவர்களில் ஒருவர் இறந்துவிட்ட தாகவும் தெரிவிக்கப்பட்டது. ஹெலிகாப்டரின் விமானி, இணை விமானி, அதில் பயணம் செய்த ஆறு சீனப் பயணிகள் என காயமடைந்த அனைவரும். முதலுதவிக்குப் பின் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.

புறப்பட்ட சிறிது நேரத்தில் மீண்டும் தரையிறங்கியபோது கீழே நின்றிருந்த இரண்டு ஊழியர்கள் மீது ஹெலிகாப்டர் மோதியதாகத் தெரிவிக்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி