அமைச்சரவையில் பெரும் மாற்றம்

அமைச்சரவையில் பெரும் மாற்றம்

2 mins read
5abc91de-6c01-4142-a431-c7cf3396cde3
-

சிங்கப்பூரில் தலைமைத்துவ மாற்றம் நல்ல முறையில் நடந்துவருகிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார். பிரதமர் திரு லீ, அமைச்சரவையில் பெரிய அளவிலான மாற்றங்களை நேற்று அறிவித்தார். அதனை அடுத்து ஃபேஸ்புக் பக்கத்தில் அமைச்சரவை மாற்றம் பற்றி கருத்து தெரிவித்த பிரதமர், இந்த ஆண்டின் அமைச் சரவை மாற்றம் வழக்கமான மாற்றங்களை விட மிகவும் பரந்த அளவில் இடம் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டார்.

இளம் அமைச்சர்களில் பலரிடம் இரண்டு அமைச்சரவைப் பதவிகளையும் கூடுதல் பொறுப்புகளையும் ஒப்படைக்க தான் முடிவு செய்ததாக திரு லீ கூறினார். "சிங்கப்பூரை நிர்வகித்து ஆள்வதற் காக மேலும் பல பொறுப்புகளை இளம் அமைச்சர்கள் கட்டம் கட்டமாக மேற்கொள் வார்கள். அமைச்சரவை மாற்றத்தை அடுத்து மூன்றில் இரண்டு பங்கு அமைச் சுகளுக்கு அதாவது 10 அமைச்சுகளுக்கு இளைய அமைச்சர்கள் தலைமைதாங்கு வார்கள்," என்று திரு லீ தெரிவித்தார்.

பிரதமர் லீ, அண்மைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தன் அமைச்சரவையில் பெரும் மாற்றங்களை நேற்று அறிவித்தார். ஒருவர் தவிர அமைச்சர்கள் அனைவரும் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். அமைச்சரவை மாற்றத்தையடுத்து நான்காம் தலைமுறை அமைச்சர்கள் முக் கிய பொறுப்புகளை ஏற்கிறார்கள். அவர் கள், மூன்றில் இரண்டு பங்கு அமைச்சு களுக்கு அதாவது 10 அமைச்சுகளுக்கு தலைமை வகிப்பார்கள்.

மொத்தம் 66 ஆண்டுகள் அனுபவத் துடன், பல பொறுப்புகளை ஏற்று தொண் டாற்றி வந்துள்ள, பழுத்த அனுபவம் வாய்ந்த மூன்று அமைச்சர்கள் ஓய்வு பெறுகிறார்கள். வர்த்தக தொழில் (வர்த்தகம்) அமைச்சர் லிம் ஹங் கியாங், 64, மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே, 63, தொடர்பு தகவல் அமைச் சர் யாக்கூப் இப்ராஹிம், 62, ஆகியோர் அந்த மூவர். தொழிலாளர் இயக்கத் தலைவர் சான் சுன் சிங், 48, இரண்டாவது மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, 49, வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ் ஈஸ்வரன், 55, ஆகியோர் அந்த மூவருக்கும் பதிலாக முறையே பொறுப்புகளை ஏற்கிறார்கள்.

திரு ஈஸ்வரன், வர்த்தக தொழில் அமைச் சில் வர்த்தக உறவுகளுக்கான பொறுப்பு அமைச்சராகவும் செயலாற்றுவார். இப்போது மூத்த துணை அமைச்சராக இருக்கும் குமாரி இந்திராணி ராஜா, 55, பிரதமர் அலுவலகத்தில் முழு அமைச்சராக பொறுப்பேற்பார். அதோடு, நிதி, கல்வித் துறை இரண்டாவது அமைச்சராகவும் அவர் சேவையாற்றுவார். இப்போதைய கல்வி அமைச்சரான ஓங் யி காங், 48, அந்த அமைச்சுக்கு முழு பொறுப்பேற்பார். இரண்டா வது தற்காப்பு அமைச்சர் பதவியை அவர் கைவிடுவார்.

இப்போது சக கல்வி அமைச்சராக உள்ள இங் சீ மெங், 49, பிரதமர் அலுவலகத்தில் அமைச்சராக நியமிக்கப்படுகிறார். இவர் தொழிலாளர் இயக்கத்தில் முக்கிய பொறுப் பேற்கிறார். இந்த மாற்றங்கள் எல்லாம் மே 1ஆம் தேதி முதல் நடப்புக்கு வருகின்றன.

அமைச்சரவை மாற்றம் அறிவிக்கப்பட்டதற்கு முன் நடந்த அமைச்சரவைக் கூட்டம். படம்: தொடர்பு தகவல் அமைச்சு