பிரதமர் லீ சியன் லூங் நேற்று அறிவித்த அமைச்சரவை மாற்றங்க ளின்படி, புதிய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண் ணிக்கை இரண்டு குறைந்து இப் போது 19 ஆகியுள்ளது. இந்தப் புதிய நாடாளுமன்ற பருவத்தில் பிரதமர் செய்திருக்கும் மூன்றாவது அமைச்சரவை மாற்றம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பெரிய அமைச்சரவை மாற்றம் 2011ஆம் ஆண்டு மே மாதத்தில் பொதுத் தேர்தலுக்குப் பிறகு இடம்பெற்றது. அப்போது 14 அமைச்சுகளில் 11க்கு புதிய அமைச்சர்கள் தலைமை தாங்கி னார்கள். இப்போதுள்ள மாற்றம் தலை மைத்துவ மாற்றத்தில் கவனம் செலுத்தி அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் இதற்கு முன், தமக்குப் பின்னர் ஒரு புதிய தலைமைத்துவக் குழு பொறுப்பேற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
தற்போதைய அரசாங்கத்தின் காலம் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் முடிவடையும். அதன் அடிப்படையிலேயே முக்கியமான நான்காம் தலைமுறைத் தலைவர் களுக்கு கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் கவனித்து வந்த தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். அதேபோல், துணைப் பிரதமர் டியோ கவனித்து வந்த பொதுத் துறை பொறுப்பை திரு சான் சுன் சிங் ஏற்றுக்கொள்வார். முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராக திரு மசகோஸ் ஸுல்கிஃப்லி அறி விக்கப்பட்டுள்ளார். இதுவரை அந்தப் பொறுப்பை டாக்டர் யாக் கூப் இப்ராஹிம் கவனித்து வந்தார்.
டாக்டர் யாக்கூப் கவனித்து வந்த இணையப் பாதுகாப்பு விவ காரங்களை இனி டாக்டர் ஜனில் புதுச்சேரி ஏற்றுக்கொள்வார். பிரதமர் அலுவலகத்தின் மூத்த துணை அமைச்சராக இருக்கும் திரு ஹெங் சீ ஹாவ் அந்தப் பொறுப்பைக் கைவிட்டு, தற்காப்பு மூத்த துணை அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சராக இருக்கும் திருவாட்டி சிம் ஆன், அந்தப் பொறுப்பைக் கைவிட்டு, தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சரா கப் புதிய பொறுப்பில் நியமிக்கப் பட்டுள்ளார்.
மேலும் கலாசார, சமூக, இளை யர்துறை மூத்த துணை அமைச்சர் பொறுப்பிலும் அவர் தொடர்வார். திரு சீ ஹொங் டாட் வர்த்தக தொழில் மற்றும் கல்வி அமைச்சுக ளின் மூத்த துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதுவரை கவனித்து வந்த தொடர்பு தகவல் மற்றும் சுகாதார அமைச்சுகளின் பொறுப்பு களைக் கைவிடுவார்.
டாக்டர் ஜனில் போக்குவரத்து மூத்த துணை அமைச்சராகிறார். தொடர்பு தகவல் அமைச்சில் தனது பணிகளைத் தொடரும் அவர் கல்வி அமைச்சின் பொறுப்பு களைக் கைவிடுகிறார். டாக்டர் கோ போ கூன் வர்த்தக தொழில் அமைச்சின் பொறுப்பைக் கைவிடுவார். இருப்பினும், அவர் வர்த்தக தொழில் அமைச்சு பொறுப்பைத் தொடர்வார். திரு சேம் டான், பிரதமர் அலுவலகம் மற்றும் மனிதவள அமைச்சுகளில் தாம் வகித்த பொறுப்புகளைக் கைவிட்டு, சமு தாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சராகப் பொறுப்பேற்கிறார். வெளியுறவு துணை அமைச்சர் பொறுப்பையும் திரு டான் தொடர்கி றார். வர்த்தக தொழில் அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாள ரான திருவாட்டி லோ யென் லிங் அந்தப் பொறுப்பைக் கைவிடுகிறார். கல்வி அமைச்சின் பொறுப்பைத் தொடரும் திருவாட்டி லோ, மனித வள அமைச்சின் மூத்த நாடாளு மன்றச் செயலாளராகவும் நியமிக் கப்பட்டுள்ளார்.
நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் கவனித்து வந்த தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

