இரு கொரியாக்களின் தலைவர் கள் நேற்று நேரடியாகச் சந் தித்துப் பேசியது வரலாற்றில் இடம்பெறத்தக்க நிகழ்வு. அதி லும் தென்கொரியாவில் அந்தச் சந்திப்பு நடைபெற்று இருப்பது மேலும் சிறப்புக்குரியது. அந்தச் சந்திப்புக்குப் பின்னர், இரு தலைவர்களுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டது. அந்த விவரங்கள் 'பான்முன்ஜோம் பிர கடனம்' என்ற தலைப்பில் வெளி யிடப்பட்டது.
கொரிய தீபகற்பத்தில் அமைதிக் கொள்கையை நிலை நாட்டுவது, முழுமையாக அணு ஆயுதமற்றதாக தீபகற்பத்தை மாற்ற உலக சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவது என அவர்கள் ஒப்புக்கொண்டனர். "ராணுவப் பதற்றம் தணிந்து நம்பிக்கையை ஏற்படுத்துவதில் கணிசமான முன்னேற்றம் காணப் பட்டு வருவதால் ஆயுதக்களைவை படிப்படியாக நிறைவேற்ற தென், வடகொரியாக்கள் ஒப்புக்கொண் டுள்ளன," என்பது அந்த உடன் பாட்டின் முக்கிய அம்சம்.
காலை முதல் மாலை வரை நடைபெற்ற உச்சநிலைக் கூட்டத் திற்குப் பின்னர் வெளியிடப்பட்ட அந்த உடன்பாட்டில் மூனும் கிம் மும் கையெழுத்திட்டனர். பின்னர் இருவரும் நேசக்கரம் குலுக்கி ஆரத்தழுவிக் கொண்டனர். "கொரிய தீபகற்பத்தில் போர் என்ற பேச்சுக்கே இடமில்லை என 80 மில்லியன் கொரிய மக் கள், உலக நாடுகள் முன்னிலை யில் இரு கொரியத் தலைவர்களும் உளமார உடன்பாடு கண்டுள்ள னர். அமைதியை நோக்கிய புதிய சகாப்தம் தொடங்கிவிட்டது," என உடன்பாட்டில் குறிப்பிடப்பட்டுள் ளது. கொரிய தீபகற்பத்தில் அமைதி, வளப்பம், ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் உடன்பாடு தயாரிக்கப்பட்டுள்ளதாக இரு தலைவர்களும் கூறினர்.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் (இடது) தென்கொரிய அதிபர் மூன் ஜேவும் உச்சநிலைச் சந்திப்புக்குப் பின்னர் நேசக்கரம் குலுக்கி, ஆரத்தழுவினர். 65 ஆண்டுகளில் தென்கொரியாவுக்குள் காலடி எடுத்துவைத்த முதல் தலைவர் கிம். படம்: ஏஎஃப்பி

