பிரதமர்: ஆசியான் ஒன்றாகச் செயல்பட புதிய துறைகளைக் காணவேண்டும்

பிரதமர்: ஆசியான் ஒன்றாகச் செயல்பட புதிய துறைகளைக் காணவேண்டும்

1 mins read
b35b6fb1-82f3-46d0-8b74-bcfb903376c0
-

ஆசியான் ஒன்றாகச் சேர்ந்து பாடுபட புதிய துறைகளைக் காணவேண்டிய தேவை இருக் கிறது என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்து இருக்கிறார். ஆசியான் நாடுகள் ஒன்றாகச் செயல்பட புதிய கடப்பாடும் தேவை என்று திரு லீ வலியுறுத் தினார். இப்படிச் செய்வதன் மூலம் இந்த வட்டாரத்தின் எதிர் காலத்திற்கான மையமாக ஆசி யான் தொடர்ந்து திகழமுடியும் என்று திரு லீ குறிப்பிட்டார். ஆசியானின் தலைமைப் பொறுப்பை சிங்கப்பூர் இந்த ஆண்டு ஏற்கிறது. இந்த நிலை யில், 32வது ஆசியான் உச்ச- நிலைக் கூட்டத்தை சிங்கப்பூர் ஏற்று நடத்துகிறது.

அந்தக் கூட்டத்தின் தொடக் கத்தில் நேற்று திரு லீ உரையாற் றினார். ஆசியானில் ஒற்றுமை குலைந்து ஒவ்வொரு நாடும் தன்னைத்தானே கவனித்துக் கொள்ளவிடப்பட்டால், ஒவ்வொரு நாடும் தனது சொந்த தனிப்பட்ட வழியில் சென்றால், ஆசியான் குழுமம் அதனுடைய உறுப்பு நாடுகளுக்கு மட்டுமின்றி அதன் பங்காளி நாடுகளுக்கும் இதர வல்லரசுகளுக்கும் அவ்வளவாக பொருத்தமில்லாத ஒன்றாக ஆகி விடும் என்றார் திரு லீ.

ஆசியான் மாநாட்டில் பிரதமர் லீ சியன் லூங் உரையாற்றுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்