குடும்பத்துக்கு ஏற்ற பொதுப் போக்குவரத்துக்கு பரிந்துரைகள்

குடும்பத்துக்கு ஏற்ற பொதுப் போக்குவரத்துக்கு பரிந்துரைகள்

1 mins read
79b0766e-b9f9-462d-bebd-b3f0d27efebe
-

குடும்பங்களுக்கு மிகவும் உகந்த வையாக பொதுப் போக்குவரத்தை ஆக்குவது குறித்து ஆராய பணிக்கப்பட்ட ஆலோசனைக் குழு ஒன்று 20க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை முன்வைத்து உள்ளது. குழந்தைத் தள்ளுவண்டிகளை பின்புறக் கதவு வழியாக பேருந்தில் ஏற்றுதல், அந்த வண்டிகளை அசையாமல் நிறுத்தும் வசதி, குழந்தைகளைப் பராமரிக்கும் இடத்தை பெற்றோர் அறிவதற்கு உதவும் விதத்திலான போக்கு வரத்துச் செயலிகள் உள்ளிட்ட பரிந்துரைகள் அவற்றில் உள்ளன. பராமரிப்பில் இருக்கும் மின் தூக்கிகள், தடுப்புகள் இல்லாத டாக்சி நிறுத்தங்கள் போன்றவற் றைக் காட்டும் விதத்தில் இணை யப்பக்கங்கள், போக்குவரத்துச் செயலிகளில் தகவல்களை வெளி யிடுவது போன்றவையும் பரிந் துரைக்கப்பட்டுள்ளன.

பொதுப் போக்குவரத்து மன்றத் தலைவர் ரிச்சர்ட் மேக்னஸ், போக்குவரத்துக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழுவின் தலைவர் சித்தோ யி பின் ஆகியோரின் கூட்டுத் தலைமையிலான அந்தக் குழு 10 மாதங்களில் 3,000க்கும் அதிகமான பயணிகளிடம் கருத் துகளைப் பெற்று எட்டிய இந்தப் பரிந்துரைகள் போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின்னிடம் நேற்று சமர்ப்பிக் கப்பட்டன.

பொதுப் போக்குவரத்துக் கட்ட மைப்பு, புதுப்பிப்புப் பணிகளுக்காக கடந்த சில ஆண்டுகளில் சிங்கப்பூர் அதிக அளவில் முதலீடு செய்திருப்பதாகக் குறிப்பிட்ட டாக்டர் லாம், அதனை மேம்படுத் துவது பற்றி விளக்கும் விதத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை பாராட்டுக்குரியது என்றார்.