நாட்டுக்கு வெற்றி ஈட்டித் தந்த நன்மதிப்புகளைக் கட்டிக்காக்கும் அதேவேளை சிங்கப்பூரை புதுப்பிப் பது புதிய தலைமுறை சிங்கப்பூரர் களின் பொறுப்பாக இருக்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். வருடாந்திர மே தினப் பேரணி யில் உரைநிகழ்த்திய அவர், "முன்னோடித் தலைமுறையினர் நாட்டை உருவாக்கித் தந்தார்கள். அதற்கடுத்து வந்தவர்கள் சிங்கப் பூரை உலகத்தரத்திற்கு உயர்த்த பல்வேறு சிரமங்களைத் தாங்கி பாடுபட்டார்கள்," என்றார்,
"எனவே இப்போதுள்ள சிங்கப் பூர் தலைமுறையினரின் பொறுப்பு என்னவென்று பார்த்தால் சிங்கப் பூரை புதுப்பிப்பதுதான். அதாவது, புதிய அத்தியாயத்தைத் தொடங்கு வது, நம் நாட்டிற்காக புதிய சாத் தியங்களையும் சாதனைகளையும் உருவாக்குவது போன்றவை புதுப் பித்தல் பணியில் அடங்கும்," என அமைச்சர்கள், முதலாளிகள், ஊழி யர்கள், தொழிற்சங்கத்தினர் உள் ளிட்ட 1,600 பேர் முன்னிலையில் திரு லீ குறிப்பிட்டார்.
"எதிர்காலத்துக்கான இந்தப் பகிர்வுப் பொறுப்புதான் நம் பலம். "சிங்கப்பூர் இன்னும் வெற்றிக் கான கூறுகளைக் கொண்டிருக் கிறது என்பதை உலகுக்கு உணர்த் துவதோடு நமக்கு நாமே தெரிந்து கொள்வது என்பது நாம் எவ்வாறு செயல்படப்போகிறோம் என்பதில் உள்ளது," என்றார் பிரதமர்.

