சிங்கப்பூர் அமைச்சரவையில் புதி தாக இடம்பெற்றோரில் சிலர் நேற்று அதிபர் ஹலிமா யாக்கோப் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். பிரதமர் அலுவலக அமைச்சராக வும் கல்வி, நிதி ஆகியவற்றின் இரண்டாம் அமைச்சராகவும் குமாரி இந்திராணி ராஜா பதவிப் பிர மாணம் எடுத்துக்கொண்டார். அமைச்சரவையில் புதியவர் களுக்கு வாய்ப்பளிக்கும் பிரதம ரின் முயற்சியின் ஓர் அங்கமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த நால்வருக்கு அமைச்ச ரவையில் இடமளிக்கப்பட்டுள்ளது. அந்த நால்வரில் மூவர் நேற்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
உள்துறை, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் மூத்த நாடாளு மன்றச் செயலாளராக சுன் சூலிங், தேசிய வளர்ச்சி, மனிதவள துணை அமைச்சராக ஸாக்கி முகம்மது, வெளியுறவு, வர்த்தக தொழில் அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளராக டான் வு மெங் ஆகியோரே அம் மூவர். நான்காமவரான எட்வின் டோங் ஜூலை 1ஆம் தேதி புதிய பொறுப்புக்கான பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வார். சட்ட, சுகா தார மூத்த துணை அமைச்சராக அப்போது அவர் பொறுப்பேற்றுக் கொள்வார். இதற்கிடையே, சிங்கப்பூரில் அமைச்சராக இருப்பது என்பது புனித நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்குவதைக் குறிக்கும் என்று குமாரி இந்திராணி ராஜா குறிப் பிட்டுள்ளார். "அரசாங்கத்திலுள்ள சக தோழர்களுடனும் சிங்கப்பூ ரர்களுடனும் பங்காளித்துவம் செய்துகொண்டு சிங்கப்பூரை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றிச் செல்லும் கடமையைச் செய்வதற் கான நம்பிக்கையும் சிறப்புரிமையும் அளிக்கப்படுவதுதான் அமைச்சர் என்னும் பொறுப்பு," என்று அவர் தமது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள் ளார்.
(இடமிருந்து) உள்துறை, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் சுன் சூலிங், பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, நிதி ஆகியவற்றின் இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா, பிரதமர் லீ சியன் லூங், அதிபர் ஹலிமா யாக்கோப், அவரது கணவர் அப்துல்லா அல்ஹப்ஷி, தேசிய வளர்ச்சி, மனிதவள துணை அமைச்சர் ஸாக்கி முகம்மது, வெளியுறவு, வர்த்தக தொழில் அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் டான் வு மெங். படம்: சாவ் பாவ்

