டெங்கி: மூவர் மரணம்

1 mins read
ab114641-29fa-4bc9-a80e-c26b72b1a1a3
-

ஜூரோங் வெஸ்ட்டில் டெங்கி பரவல் மிகுந்த பகுதியில் வசித்த மூவர் டெங்கிக் காய்ச்சலால் உயி ரிழந்துவிட்டதாக தேசிய சுற்றுப் புற வாரியமும் சுகாதார அமைச் சும் இணைந்து நேற்று தெரிவித் தன. அம்மூவரில் 68 வயது சிங் கப்பூர் மாது கடந்த மாதம் 13ஆம் தேதி வெளிநாட்டில் மாண்டார். மற்றொருவரான 41 வயது சிங்கப்பூர் ஆடவர் டெங்கி காய்ச் சல் கண்டு இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையில் கடந்த மாதம் 29ஆம் தேதி அனுமதிக்கப் பட்டார்.

உடல்நிலை மோசமடைந்த தன் காரணமாக கடந்த வியாழக் கிழமை அவர் உயிரிழந்தார். அதே நாளில் அதே மருத்துவ மனையில் டெங்கிக் காய்ச்சல் காரணமாக 63 வயது மாது ஒரு வரும் மாண்டார். இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை யில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்ட அவர் இரு நாட் களில் உயிரிழந்ததாகக் கூட்ட றிக்கை தெரிவித்தது. மாண்டோரின் குடும்பங் களுக்கு தேசிய சுற்றுப்புற வாரியமும் சுகாதார அமைச்சும் தங் களது அனுதாபத்தைத் தெரி வித்துக்கொண்டுள்ளன. சிங்கப்பூரில் ஆகப்பெரிய டெங்கி பரவல் இடமாகக் கருதப் படும் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 91, 92 பகுதிகளில் இவ்வாண்டில் 60 டெங்கி சம்பவங்கள் பதி வானதாகவும் அவ்வறிக்கை சுட் டியது. இவற்றில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 32 சம் பவங்கள் பதிவாயின.