சிங்கப்பூரின் நான்காம் தலை முறைத் தலைவர்கள் நாட்டை வழிநடத்திச்செல்லும் உரிமையைப் பெற மக்களுடன் தாமாகப் புதிய பந்தங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் தெரிவித்துள்ளார். அதிபராகப் பதவி ஏற்றபிறகு முதல்முறையாக நாடாளுமன்றக் கூட்டத்தொடரைத் தொடங்கி வைத்துப் பேசிய திருவாட்டி ஹலிமா, சிங்கப்பூரர்களுக்கும் அவர்களின் தலைவர்களுக்கும் இடையில் நிலவும் நம்பிக்கை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குத் தானாகக் கை மாறிச் செல்லாது என்றார்.
மாறாக, புதிய தலைவர்கள் மக்களோடு சேர்ந்து செயல்பட்டு, ஒன்றாகப் பற்பல சோதனை களையும் சிரமங்களையும் கடந்து சென்று, அந்த நம்பிக்கையை ஈட்டவேண்டும் என்றார் அவர். இதற்கான வழிமுறையையும் அவர் எடுத்துரைத்தார். "அவர்களின் கடமை தெளி வானது, ஆனால் பாதை எளிதா னதல்ல. சிரமமான காலகட்டங் கள் எழும்போது, அவர்கள் தலை மைத்துவத்தையும் உறுதியான செயல்பாட்டையும் வெளிக்காட்ட வேண்டும்.

