சிறார்களுக்கு அதிக ஆதரவு தொடரும்

சிறார்களுக்கு அதிக ஆதரவு தொடரும்

1 mins read
04ac3a8d-dbfe-431b-9082-0f061da5ba52
-

அலட்சியமாக நடத்தப்படுகின்ற, கொடுமைக்கு ஆளாகின்ற, சிறா களுக்குச் சமுதாய, குடும்ப மேம் பாட்டு அமைச்சின் உதவிகள் தொடர்ந்து மேம்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிபர் உரையின் பிற்சேர்க் கையில் தன் அமைச்சுக்கான முன்னுரிமைகள், திட்டங்களை சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ அறி வித்து இருக்கிறார்.

முதியவர்கள் ஒருபுறம் இருக்க, இத்தகைய சிறார்களுக் கும் உதவிகள் மேம்படும் என்றார் அவர். கொடுமைகளுக்கு ஆளா கும் சிறாருக்குப் பாதுகாப்பான வீட்டு சூழலை ஏற்படுத்தும் வகையில் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் ஆதரவு, தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ முடியாத சிறார்கள், வேறு ஒரு குடும்பச் சூழ்நிலையில் வளர் வதற்குத் தோதாக சிறார் பரா மரிப்பு சேவையை விரிவுபடுத்து வது முதலானவை இவற்றில் அடங்கும் என்றார் அமைச்சர்.

கல்வி அமைச்சின் MK@Punggol Green பாலர்பள்ளியில் நடக்கும் வகுப்பில் பிள்ளைகள் ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்