ரயில் நிலையத்தை அடையவிருக் கும் ரயிலின் எந்தெந்த வண்டிகள் கூட்டமாக அல்லது காலியாக இருக்கின்றன என்பதை டௌன் டவுன் ரயில்தடப் பயணிகளிடம் தெரியப்படுத்தி, அவர்கள் பொருத் தமான நடைமேடைக் கதவுகளைத் தேர்ந்தெடுத்து வரிசைப்பிடித்து நிற்க துணைபுரியும் புதிய செயல் முறை அமலாகவிருக்கிறது. புதிய "பயணிகள் எண் ணிக்கை தகவல் முறை" முன் னோட்டமாக அறிமுகமாகும் என நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று அறிவித்தது.
நடைமேடையி லுள்ள எல்சிடி திரைகளின் மூலம், ரயிலின் ஒவ்வொரு வண்டியின் பயணிகள் எண்ணிக்கை அளவும் காட்டப்படும். அதிக கூட்டமில்லாத ரயில் வண்டிகளுக்குப் பயணிகளை வழிகாட்டி, ரயிலில் ஏறுவதைச் சுலபமாக்கவும், ஒவ்வொரு ரயி லின் கொள்ளளவை அதிகப்படுத்த வும் இது உதவும் என ஆணையம் கூறியது. மூன்று நிறக் குறியீடுகள் பயன்படுத்தப்படும்: ரயில் வண்டி யில் கூட்டமில்லை என்றும் இருக்கை கிடைப்பதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் பச்சை நிறம் குறிக்கும். நிற்பதற்கு மட்டுமே இடம் இருப்பதை மஞ்சள் நிறம் குறிக்கும்.
புதிதாக அறிமுகமாகியுள்ள ரயிலில் பயணிகளின் அளவு பற்றிய தகவல் முறை தளமேடையில் காத்திருக்கும் பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படம்: ஃபேஸ்புக்/எல்டிஏ

