போலிசுக்கு சிறப்பு அதிகாரம் கொடுக்கும் புதிய சட்டம் இன்று முதல் அமல்

போலிசுக்கு சிறப்பு அதிகாரம் கொடுக்கும் புதிய சட்டம் இன்று முதல் அமல்

1 mins read
500bc83c-8f62-4d37-bb20-6478290d1b8d
-

போலிசுக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கும் புதிய சட்டமான 'பொஸ்பா' எனும் பொது ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு (சிறப்பு அதிகா ரங்கள்) சட்டம் இன்று முதல் நடப்புக்கு வருகிறது என்று உள் துறை அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. இச்சட்டம் முன்னதாக இவ் வாண்டு மார்ச் மாதம் 21ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமாகிறது. 'பொஸ்பா' சட்டத்தின் கீழ், பயங்கரவாதத் தாக்குதல் உட்பட கடுமையான சம்பவங்களைக் கையாள போலிஸ் இந்தச் சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்த லாம். 'பொஸ்பா' சட்டத்துக்கு அதிக அதிகாரங்கள் இருப்பதால் அதை உடனடியாகப் பயன்படுத்த முடி யாத அளவுக்கு இரண்டு 'பூட்டு கள்' போடப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சு விளக்கியது. 'பொஸ்பா' சட்டத்தைப் பயன் படுத்த வேண்டும் என்றால், உள் துறை அமைச்சர் சட்டத்தில் உள்ள அதிகாரங்களைப் பயன் படுத்த ஒப்புதல் அளிக்க வேண் டும்.

மக்களைப் பிணை பிடித்துவைத்திருக்கும் சம்பவத்தை போலிஸ் படையின் அதிரடி பிரிவு அதிகாரிகள் எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதை விளக்கும் வகையில் காட்சி ஒன்று நடித்து காட்டப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்