18 உயிர்களைப் பலி வாங்கிய பாலம்

18 உயிர்களைப் பலி வாங்கிய பாலம்

1 mins read
1ba28053-09da-42f4-8879-c7aee11b2ab8
-

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கேன்டோன்மென்ட் ரயில் நிலையம் அருகே மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. 2,261 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலத்தின் கட்டுமான வேலைகள் கிட்டத்தட்ட பாதியளவு முடிந்த நிலையில் நேற்று முன்தினம் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தின் கீழ் இருந்த பேருந்துகளும் கார்களும் பலமாகச் சிதைந்து உருக்குலைந்தன. அவற்றினுள் இருந்தவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவ்வழியாக நடந்து சென்றவர்களும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். மாண்டோர் எண்ணிக்கை 18ஐத் தொட்டது. இச்சம்பவம் தொடர் பில் நான்கு பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.