1எம்டிபி: நஜிப்புக்கு அழைப்பாணை

1 mins read
fd5a1869-6a6d-4fd7-9444-6b6e58d02d6a
-

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்குக்கு மலேசியாவின் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் அழைப் பாணை விடுத்துள்ளது. '1எம்டிபி' தொடர்பிலான விசா ரணை குறித்து அறிக்கை அளிக்குமாறு அதில் குறிப் பிடப்பட்டு உள்ளதாக ஆணை யத்தைச் சேர்ந்த இருவர் குறிப்பிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி தெரிவித்தது. சுமார் 10.6 மில்லியன் அமெரிக்க டாலர் ($14.3 மி) தொகை 'எஸ்ஆர்சி இன்டர் நேஷனல்' எனும் அரசாங்க நிதியிலிருந்து திரு நஜிப்பின் சொந்த கணக்குக்கு மாற்றப் பட்டு இருப்பதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டு இருப் பதாக '1எம்டிபி' விசாரணை குறித்த கோப்புகளை ஆய்வு செய்த ஆணைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆணையத்தின் அதிகாரி கள் நேற்று திரு நஜிப்பின் இல்லத்தில் காணப்பட்டதாக வும் 'எஸ்ஆர்சி' நிதி தொடர்பில் வாக்குமூலத்தைப் பதிவுசெய்வ தற்காக எதிர்வரும் செவ்வாய்க் கிழமை ஆணையத்தின் அலு வலகத்துக்கு திரு நஜிப்பை வரச்சொல்லும் அறிவிப்பை அளிப்பதற்காக அவர்கள் சென்றிருப்பதாகவும் ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டது.