திருப்புமுனையில் ஆசியான்

திருப்புமுனையில் ஆசியான்

1 mins read
fd768e0a-414c-4a1f-bb2a-ecf3ad963278
-

திறந்த, விதிமுறைகள் சார்ந்த வர்த்தக முறை, வர்த்தக ஒருங்கி ணைப்பு, பொருளியல் ஒத்துழைப்பு ஆகியவை பெரும் நெருக்கடியில் உள்ளதால் ஆசியான் திருப்பு முனையில் இருக்கிறது என்று வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார். உலகமயமாதல் மூலம் கிடைத்த சீரற்ற பலன்கள் சுரண்டப்பட்டு வரும் தருணத்தில் இந்நிலை ஏற் பட்டுள்ளதால், ஆசியான் போன்ற தளங்களின் ஏற்புடைத்தன்மை, மதிப்பிற்கு சவால்விடும் வகையில் மற்றவர்களின் நலனில் அக்கறை இல்லாத மனநிலையை ஏற்படுத்தக் கூடும் என்று திரு சான் கூறினார்.

ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று நடைபெற்ற 'தி பிஸ்னஸ் டைம்ஸ் தலைவர்கள் கருத்தரங்கில்' கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சான், பெரிய பொருளியல் நாடு களுக்கு இடையிலான உரசல் களால் இந்த வட்டாரமும் பாதிக் கப்படலாம் என்றார். கிட்டத்தட்ட 300 வர்த்தகத் தலைவர்கள் அக்கருத்தரங்கில் பங்கேற்றனர். "இத்தகைய சூழலிலும், திறந்த வட்டாரமாகத் திகழ்ந்து, ஒருங் கிணைப்பை வலுப்படுத்துவதில் திடமாக இருப்பதை ஆசியான் மறுஉறுதிப்படுத்துவதும் தடை இல்லா, திறந்த, விதிமுறைகள், ஒன்றையொன்று சார்ந்துள்ள அமைப்பிற்காக வலுவாகக் குரல் கொடுப்பதில் உறுப்பு நாடுகள் அணிதிரள வேண்டியதும் அவசி யம்," என்றார் திரு சான்.