உள்துறை குழுவின் புதிய பாவனை பயிற்சி முறை

1 mins read
c658fbf0-e23f-4e6b-b070-e13ad1f82c7a
-

உள்துறை குழு பாவனைப் பயிற்சி நிலையம் புதிய பாவனை முறை களைத் தொடங்கியுள்ளது. உண் மையானதுபோலவே தோற்றமளிக் கும் முப்பரிமாணக் காட்சிகளும் இடங்களும் அதில் பயன்படுத்தப் படுகின்றன. பெரிய அளவிலான நெருக் கடிநிலை ஏற்படும்போது அதனை கையாளவும் வழிநடத்துவதற்கான முடிவு எடுக்கவும் பயிற்சி அளிக் கக்கூடிய புதிய பாவனை முறையை சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் நேற்று தொடங்கி வைத்தார்.

உண்மையான சூழலில் இருப் பது போன்ற உணர்வை இம்மை யத்தில் அதிகாரிகள் பெறுவர் என்றார் அவர். உள்துறை கல்விக்கழகத்தில் நடைபெற்ற செயல்திட்ட கருத்தரங் கில் பங்கேற்றுப் பேசிய திரு சண்முகம், "பொதுவான நன்மதிப்புகளின் அடிப்படையில் உள் துறை ஒருங்கிணைப்பை வலுப் படுத்தத் திட்டமிடுகிறோம். அதில் இந்த கல்விக்கழகத்திற்கு முக் கிய பங்கு உண்டு," என்றார்.

சுவா சூ காங்கில் உள்ள உள்துறை குழு பாவனை பயிற்சி மையத்தில் புதிய பயிற்சி முறைகள் இயக்கப்படுவதை சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் பார்வையிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்