தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம்

தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம்

1 mins read
5075eff8-a0ff-437e-ada0-ad433b428788
-
Google News Preferred Icon

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பொதுமக்கள் மீதான துப்பாக்கிக் சூட்டை கண்டித்து, தமிழகம் முழுக்க இன்று முழு கடைய டைப்புப் போராட்டம் நடைபெறு கிறது. இந்தப் போராட்டத்திற்கு வணிகர் சங்கம் அழைப்பு விடுத் துள்ளது. தமிழகம் முழுவதுமே கடையடைப்பு நடத்த அச்சங்கம் முடிவு செய்துள்ளது. இதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலை வர் வெள்ளையன் அறிவித்துள் ளார். இப்போராட்டத்துக்கு வேறு சில அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் தமிழக அரசு முதுகெலும்பற்ற அரசாக உள் ளது என திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். சொந்த மக்கள் போராடிய போது அவர்களைக் கொன்ற தற்காக தமிழக அரசு வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் தமது டுவிட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.