தாமிர உருக்கு ஆலை இயக்கும் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கு எதிரான தமிழகத்தின் கொந் தளிப்பு இன்னும் முற்றாக அடங் கவில்லை. ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்று தொடங்கப்பட்ட போராட்டம் 13 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி கேட்கும் போராட்டமாகவும் மாறி உள்ளது. தமிழகத்தில் நடத்தப்படும் வரும் போராட்டங்களுக்கு இந்தி யாவிற்கு வெளியே அனைத்துலக சமூகமும் பலத்த ஆதரவைக் காட்டி வருகிறது.
இலங்கையின் மட்டக்களப்பு நகரில் நேற்றுக் காலை தூத்துக் குடி மக்களுக்கு ஆதரவு தெரி வித்தும் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தோர் ஏற்பாடு செய்த இந்தப் போராட்டத் தில் நூற்றுக்கணக்கானோர் பங் கேற்றனர். மட்டக்களப்பு காந்தி பூங்கா முன் காலை 10 மணிக்கு ஒன்று திரண்ட இலங்கை தமிழ் மக்கள் தூத்துக்குடியில் போலிசாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலி யான 13 பேருக்கு அஞ்சலி செலுத்தினர்.
இலங்கையின் மட்டக்களப்பு நகரில் நேற்று ஒன்றுதிரண்ட தமிழர்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியதோடு தூத்துக்குடியில் சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். படம்: ஊடகம்

