ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள மூத்த குடிமக்களுக்குப் பயிற்சி

ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனையை மேற்கொள்ள மூத்த குடிமக்களுக்குப் பயிற்சி

1 mins read
b69e836b-621c-4fc5-91e3-fcecceb476f1
-

திறன்பேசி வழியாகக் கட்டணம் செலுத்துவதற்கு அதற்கான செய லிகளை எவ்வாறு பயன்படுத்துவது என மூத்த குடிமக்களுக்கு கற்றுக் கொடுக்க புதிய கற்றல் பயணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பணத்தைக் கையில் எடுத்து செல்லாமல் இளையர்களைப்போல் திறன்பேசி வழியாகப் பணம் செலுத்த மூத்த குடிமக்கள் விரும் பினாலும் அதற்கான செயலி களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்த அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே அவர்களுக்கு உதவு வதற்காக மூன்று மணி நேரப் பயிற்சித் திட்டம் ஒன்று இப்போது அறிமுகமாகியுள்ளது.

மூத்தோருக்கான புதிய பயிற் சித் திட்டம் ஒன்றை தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) நேற்று அறிமுகப்படுத்தியது.

ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை பற்றிய மூத்தோருக்கான நிகழ்ச்சி யில் நேற்று பங்கேற்ற பிரதமர் லீ சியன் லூங் (நடுவில்) அங்குள்ள முதிய மாது ஒருவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேலும்