உறவுப் பாலமாக சிங்கப்பூர்: மோடி பாராட்டு

உறவுப் பாலமாக சிங்கப்பூர்: மோடி பாராட்டு

1 mins read
5bd1fd10-95d3-4b79-8156-496efa35b099
-

இர்ஷாத் முஹம்மது

எஸ் வெங்கடேஷ்வரன்

சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்ட காலமாக நெருக் கமான உறவு இருந்து வருகிறது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அந்த உறவு காலத்திற்கு ஏற்ப மாற்றம் கண்டு மேம்பட்டுள்ள தாகக் கூறிய திரு மோடி, இந்தி யாவுக்கும் ஆசியானுக்கும் இடை யிலான உறவுப் பாலமாக சிங்கப் பூர் திகழ்ந்து வருகிறது எனக் குறிப்பிட்டார். சிங்கப்பூரில் பல இன, சமூ கத்தைச் சேர்ந்த மக்கள் ஒற்று மையாக வாழ்ந்து வருவதற்கு அவர் புகழாரம் சூட்டினார். தமிழ்மொழி சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளில் ஒன் றாக இருப்பதைச் சுட்டிய அவர், இந்திய மாணவர்கள் மேலும் ஐந்து இந்திய மொழிகளைப் பள்ளிகளில் படிக்க முடிவதையும் பாராட்டிப் பேசினார். மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் நேற்று நடந்த தொழில் நுட்பம், வர்த்தகம் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இந்தியாவின் வளர்ச்சி குறித்து பகிர்ந்து கொண்டார்.

மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு மையத்தில் தொழில்முனைப்பு, புத்தாக்கக் கண்காட்சியை பிரதமர் லீ சியன் லூங்குடன் (இடது) சேர்ந்து பார்வையிடும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி (நடுவில்). படம்: ஸ்வப்னில்