உலக நாடுகள் ஆவலுடன் வடகொரியத் தலைவர் அனுப்பிய 'பெரிய கடிதம்' எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்-வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் இடையிலான உச்சநிலை சந்திப்பு திட்டமிட்டபடி வரும் ஜூன் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடப்பது உறுதியாகிவிட்டது. வடகொரியத் தலைவரை ஜூன் 12ஆம் தேதி சந்திக்க விருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். வடகொரியாவைச் சேர்ந்த திரு கிம்மின் வலதுகரமான ஜெனரல் கிம் யோங் சோலை வெள்ளை மாளிகையில் ஒரு மணி நேரம் சந்தித்துப் பேசிய பிறகு சிங்கப்பூரில் திட்டமிட்ட படி உச்சநிலை சந்திப்பு நடை பெறும் என்று அவர் கூறினார். ஆனால் வடகொரியாவுட னான சந்திப்பு, 'ஒரு நடைமுறை' என்று குறிப்பிட்ட அவர், அந்த நடைமுறை வெற்றிகரமாக முடியும் என்று நம்பிக்கை தெரி வித்தார்.
வடகொரியத் தலைவரின் கடிதத்தை அதிபர் டிரம்ப்பிடம் ஒப்படைத்த அந்நாட்டின் தூதர் கிம் யோங் சோல். இந்தக் கடிதம் பெரிதாகவும் ஆர்வத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தது என்று குறிப்பிட்ட அதிபர் டிரம்ப், உடனே அதைப் பிரித்துப் பார்க்கவில்லை என்றார். வெள்ளை மாளிகையின் அதிகாரிகள் அந்தக் கடிதத்தை கவனமாக பரிசீலித்து வருகின்றனர். படம்: வெள்ளை மாளிகை

