ரோஸ்மாவிடம் ஐந்து மணி நேர விசாரணை

1 mins read
497a8bcf-7ce6-4638-b00b-5e629c527209
-

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவியான ரோஸ்மா மன் சூரிடம் அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையம் ஐந்து மணி நேரத்துக்கு விசாரணை நடத்தியது. மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ள மலேசிய அரசின் முதலீட்டு அமைப்பான 1எம்டிபியின் துணை நிறுவனம் எஸ்ஆர்சி இன்டர்நேஷனலிலிருந்து பணம் கையாடப் பட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக திருவாட்டி ரோஸ்மா விடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். புத்ராஜெயாவில் உள்ள ஆணையத்தின் தலைமையகத்துக்கு நேற்று காலை தமது வழக்கறிஞர்களான கே.குமரேந்திரன், கீதன் ராம் வின்சென்ட் ஆகியோருடன் திருவாட்டி ரோஸ்மா சென்றார். அவருடன் அவரது மகளான நூர்யானா நஜ்வாவும் இருந்தார். விசாரணைக்கு வந்த திருவாட்டி ரோஸ்மா நீல நிற மலாய் பாரம்பரிய ஆடை யான பாஜு குரோங்கும் சிவப்பு நிற சால்வையும் அணிந்திருந்தார்.

புத்ராஜெயாவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் தமது வழக்கறிஞர்களுடன் சென்றார் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் (இடது). ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பதிலளிக்காமல் அவர் கிளம்பிச் சென்றார். படம்: ராய்ட்டர்ஸ்

மேலும் செய்திகள்