புதிய உறவின் தொடக்கம்

புதிய உறவின் தொடக்கம்

1 mins read
fd4bafaf-1a0d-4192-bf2e-a53c61937c8c
-

உலகமே பெரிதும் எதிர்நோக்கி இருந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் இடையிலான வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த உச்சநிலைச் சந்திப்பு சிங்கப்பூரில் நேற்று வெற்றிகரமாக நடந்தேறியது. அமெரிக்கா = வடகொரியா நாடுகளுக்கு இடையிலான புதிய உறவின், அத்தியாயத்தின் தொடக்கமாக இந்தச் சந்திப்பை இரு நாட்டுத் தலைவர்களும் குறிப்பிட்டுள்ளனர். கொரியத் தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, அமைதியை ஏற்படுத்தும் முயற் சிக்கு இந்தச் சந்திப்பு அடித்தளம் அமைக்கும் என நம்பப்படுகிறது. பதவியிலிருக்கும் அமெரிக்க அதிபர் ஒருவர், வடகொரியத் தலைவரைச் சந்தித்துப் பேசியிருப் பது இதுவே முதன்முறை.

அணுவாயுதத்தை முற்றிலு மாகக் களைய திரு கிம் உறுதி பூண்டுள்ளதாக மாலையில் செய் தியாளர் சந்திப்பின்போது திரு டிரம்ப் தெரிவித்தார். அணுவாயுதச் சோதனைத் தளம் ஒன்றை வடகொரியா ஏற் கெனவே அழித்துவிட்டதையும் அப்போது அவர் சுட்டினார்.

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன் (இடது), அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பு 12 வினாடி கைகுலுக்கலுடன் நேற்றுக் காலையில் தொடங்கியது. படம்: ராய்ட்டர்ஸ்

மேலும் செய்திகளுக்கு