பயங்கரவாதமும் இணைய மிரட்டலும் மிக முக்கிய பாதுகாப்பு பிரச்சினைகள் என்றும் அவற்றை சிங்கப்பூர் சமாளிக்க வேண்டி இருப்பதாகவும் சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் பணியும் பங்கும் மாறுவது இதையே புலப்படுத்து கிறது என்றும் துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்து இருக்கிறார். சிங்கப்பூர் ஆயுதப்படை கால ஓட்டத்தில் போர் ஆற்றல் படை யாகப் பரிணமித்து இருப்பதை சுட்டிய அவர், அந்தப் படை இப் போது பலதரப்பட்ட நடவடிக்கை களில் ஈடுபடக்கூடிய ஆற்றலுடன் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.
மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரணப் பணிகள், அமைதி ஆதரவு நடவடிக்கைகள், கடற்துறைப் பாதுகாப்பு பணிகள் போன்றவை இவற்றில் அடங்கும். இருந்தாலும், பயங்கரவாதம் இந்த வட்டாரம் முழுவதுமே உண் மையான, அவசர நடவடிக்கைகள் தேவைப்படக்கூடிய மிரட்டலாக இருக்கிறது என்று அவர் தெரி வித்தார். உள்நாட்டுப் பாதுகாப்பு மிரட்டல் களைச் சமாளிக்க உள்துறைக் குழுவுடன் சேர்ந்து செயல்படும் ஆயுதப்படையின் ஆற்றலும் மேம் பட்டு இருக்கிறது என்றார் அவர்.

