ஆசியானில் அங்கம் வகிக்கும் மியன்மார் நாட்டின் தென்பகுதியில் பருவமழை தீவிரமாகி திடீர் வெள்ளம் ஏற்பட்டு அதனால் நிலம் சரிந்ததால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரபலமான புத்த ஆலயம் அமைந்துள்ள இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பல வீடுகள் மூழ்கின. நூற்றுக்கணக்கான மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
மியன்மாரின் தென்புறத்தில் உள்ள மோன் என்ற மாநிலத்தில் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பேய் மழை பெய்து வருவதால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு இருக்கிறது என்றும் அந்த வெள்ளம் வடிவ தாகத் தெரியவில்லை என்றும் மழை தொடர்வதாகவும் அரசாங்கச் செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஒரு குன்றின் உச்சியில் இருக் கும் கியக் தான் லான் என்ற புத்த ஆலயம் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவினால் சேதம் அடைந்துவிட்டது. அங்கிருந்த புத்த சிலைகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல ஊழியர்கள் முயன்றதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
மியன்மாரின் மோன் மாநிலத்தின் தலைநகர் மாவ்லாம்யின்னில் குன்றின் உச்சியில் இருக்கும் கியக் தான் லான் புத்த ஆலயம் நிலச்சரிவால் சேதமடைந்தது. படம்: ஏஎஃப்பி

