ரோச்சோர் சென்டர் அடுத்த வாரம் முதல் இடிக்கப்படும்

ரோச்சோர் சென்டர் அடுத்த வாரம் முதல் இடிக்கப்படும்

1 mins read
46033d45-3cfc-4534-9339-6cf597840368
-
Google News Preferred Icon

இதுநாள் வரை உயர்ந்தோங்கி நின்றிருக்கும் ரோச்சோர் சென் டர் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 26) தொடங்கி படிப்படியாக இடிக்கப்படும். இந்த பொது வீடமைப்புப் பேட்டையின் நான்கு குடியிருப்புக் கட்டடங்கள் ஒவ் வொரு தளமாக இடிக்கப்படும். இயந்திரங்களைக் கொண்டு அகற்றும் பணி கட்டடங்களின் மேல் தளத்திலிருந்து தொடங்கும் என நிலப் போக்குவரத்துஆணை யம் நேற்று தெரிவித்தது. கட்டடங்களை அகற்றும் பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவுறும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அது கூறியது. கட்டடங்களை இடிக்கும்போது அந்த வழியாகச் செல்வோர் கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நடைபாதையை மாற்று வழியாகப் பயன்படுத்தலாம்.

நடந்து செல்வோரை வழிநடத்தும் வரைபடக் குறிப்புகள் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. அப்பகுதியைச் சுற்றிலும் இரைச்சல் தடுப்புகளும் தூசி மறைப்புகளும் பொருத்தப்பட்டு உள்ளன. அந்த வட்டாரத்தைச் சுற்றிலும் வசிக்கும் மக்களுக்கும் வர்த்தகம் புரிபவர்களுக்கும் சிர மம் ஏற்படாத வகையில் அந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது. நடப்பில் உள்ள விதிமுறை களுக்கு இணங்க அனுமதிக்கப் பட்ட இரைச்சலின் அளவைக் கண்காணித்து அதற்கேற்ப நடந்துகொள்ளுமாறு குத்தகை யாளர் கேட்டுக்கொள்ளப்பட்டுள் ளதாக ஆணையம் தெரிவித்தது.

வரும் செவ்வாய்க் கிழமை முதல் படிப்படியாக இடிக்கப்படும் ரோச்சோர் சென்டர் கட்டடங் களின் ஒரு பகுதி. இடிப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. அவ்வழியாக நடந்து செல்வோருக்கு கூரையுடன் கூடிய தற்காலிக நடைபாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேலும் செய்திகள்