பெண்டமியர் சாலையில் உள்ள வீவக அடுக்குமாடிக் குடியிருப்பின் 40வது மாடியிலிருந்து அலங்காரச் சட்டம் ஒன்று கழன்று விழுந்துள்ளது. சனிக்கிழமை இரவு சுமார் 7 மணி அளவில் புளோக் 10பியில் நடந்த இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பில்லை. அலங்காரச் சட்டம் கட்டடத்திற்கு அழகு சேர்ப்பதற்காவே அமைக்கப்பட்டுள்ளது என்றும் அது கட்டடத்தின் கட்டுமான அமைப்பைப் பாதிக் காது என்றும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது. சம்பவத்தைத் தொடர்ந்து அந்த புளோக்கின் தரத் தளத்தைச் சுற்றி தடுப்புகள் போடப்பட்டிருப்பதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சுற்று வட்டாரத்தில் உள்ள புளோக்கு களில் உள்ள அலங்காரச் சட்டங்கள் சோதிக்கப்படுகின்றன. சம்பவம் குறித்து விசாரணை தொடர்வதுடன் பாதிக்கப் பட்ட இடத்தில் சீரமைப்புப் பணிகளும் நடைபெறுகின்றன.
படம்: ஷின்மின்

