நாட்டின் தற்காப்பு மற்றும் தற்காப்பு ஆற்றல்களை மேம்படுத்துவதற்கு புதிய தொழில்நுட்பங்கள் பேருத வியாக இருக்கின்றன. ஆனால் அதே சமயத்தில் அவை தவறான வழியிலும் பயன்படுத்தப்படலாம் என்று துணைப் பிரதமர் டியோ சீ ஹியன் எச்சரித்துள்ளார். இதனால் புதிய தொழில்நுட்பங் களுக்கு அனைத்துலக சமூகம் வரைமுறைகளை வகுக்க வேண் டும் என்று அவர் அறைகூவல் விடுத்துள்ளார். சிங்கப்பூர் தற்காப்பு தொழில் நுட்ப உச்சநிலை மாநாட்டில் பேசிய தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ, தற் காப்புக்கு வர்த்தக ரீதியிலான புதிய தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு உதவியாக இருக் கின்றன என்பதை விளக்கினார்.
"வானூர்தி, இயந்திர மனிதர் கள் உள்ளிட்ட பல புதிய தொழில் நுட்பங்களை தற்காப்புத் துறையில் பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. "இத்தகைய தொழில்நுட்பங்கள் வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்யவும் கதிர்வீச்சைக் கண் டறியவும் கண்காணிக்கவும் பயன் படுத்தப்படுகின்றன. "உணர்வுக் கருவிகள், தரவு பகுப்பாய்வு உபகரணங்கள் போன்றவை தாக்குதல்கள் இடம் பெறுவதற்கு முன்னதாகவே சாத் தியமான மிரட்டல்களைக் கண் டறிய உதவுகின்றன.
சிங்கப்பூரின் ஒன் நார்த் வட்டாரத்தில் பறக்கும் ஆளில்லா வானூர்தி. போனவிஸ்தா ஆய்வு, உருவாக்க நிலையத்தில் ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிடுவதற்காக ஓரிடம் அண்மையில் ஒதுக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

