கடல்நீரைக் குடிநீராக்கும் மூன்றா வது ஆலை சிங்கப்பூரின் துவாஸ் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது. குடியரசின் குடிநீர் தொடர்பான சவால்களைச் சமாளிப்பதற்கு இந்த ஆலை மேலும் உதவும். $217 மில்லியன் செலவில் உரு வாக்கப்பட்டுள்ள இந்த ஆலை நாள் ஒன்றுக்கு 30 மில்லியன் கேலன் குடிநீரைத் தயாரிக்கும். இது நாள் ஒன்றுக்கு 200,000 இல்லங்களுக்குப் போதுமானதாக இருக்கும்.
இந்தப் புதிய ஆலையின் திறப் பால், சிங்கப்பூர் குடிநீரின் 30 விழுக்காட்டு தேவைக்கு கடல் நீரைக் குடிநீராக்கும் முறையின் மூலம் தீர்வு காணலாம். முன்பு இந்தக் குடிநீர் தேவை 25 விழுக் காடாக இருந்தது. துவாஸ் ஆலையின் திறப்பு விழாவில் நேற்று பேசிய சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல் கிஃப்லி, சிங்கப்பூரில் தண்ணீர் எப்போதும் நீடிக்கும் முக்கியமான பிரச்சினை என்றார். "புதுநீர் போன்று கடல்நீரைக் குடிநீராக்குதல் வானிலையைச் சாராத நீர்வளம். பருவநிலை மாற்றம் தொடர்பான மிரட்டல்களைச் சமாளிக்க இந்த நீர்வளம் உதவி புரியும்," என்று குறிப்பிட்ட அமைச் சர், நாட்டின் இதர நீர்வளங்களை யும் சுட்டினார்.

