மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் மீது பாய்ந்த லாரி; இருவர் பலி

மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் மீது பாய்ந்த லாரி; இருவர் பலி

1 mins read
d9ec6f90-b3ab-4258-af0d-d138eac60e2c
-

சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் ஜோகூர் கடற்பாலத் தில் நேற்று காலை நிகழ்ந்த மிக மோசமான விபத்தில் இருவர் உயிரிழந்தனர். அதிவேகத்தில் பாய்ந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் ஓட் டிகள் மீது மோதியதாகக் கூறப் படுகிறது. ஆனால் இதனை காவல்துறையினர் உறுதிப்படுத்த வில்லை. விபத்தில் இரு லாரிகள், மூன்று மோட்டார் சைக்கிள்கள் சிக்கியதாக நம்பப்படுகிறது. இதன் தொடர்பில் இழுவை லாரியின் 30 வயது ஓட்டுநரை குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய சந்தேகத்தின்பேரிலும் மற்றொரு லாரியின் 23 வயது ஓட்டுநரை கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டியதற்காகவும் காவல்துறை யினர் கைது செய்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்த வர்களில் 23 வயது ஓட்டுநரும் ஒருவர்.

நேற்று பின்னிரவு ஒரு மணி அளவில் ஆம்புலன்ஸ் கேட்டு குடிமைத் தற்காப்புப் படைக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து மூன்று ஆம் புலன்ஸ் வாகனங்களும் ஒரு தீய ணைப்பு வாகனமும் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டன.