புலாவ் உபினில் முதல் 'பயங்கரவாதத் தாக்குதல்' பாவனைப் பயிற்சி

புலாவ் உபினில் முதல் 'பயங்கரவாதத் தாக்குதல்' பாவனைப் பயிற்சி

1 mins read
ca4cc9c3-6f9e-4862-aaf0-b8c59f5deba5
-

புலாவ் உபினில் முதன்முறையாக பயங்கரவாதத் தாக்குதல் சமா ளிப்பு பாவனைப் பயிற்சி நேற்று காலை நடத்தப்பட்டது. அங்குள்ள காப்பிக்கடை ஒன்றில் அமர்ந் திருந்த தீவின் பார்வையாளர்கள் மீது இரண்டு துப்பாக்கிகள் ஏந்திய பயங்கரவாதிகள் தாக்கு தல் நடத்துவதுபோல காட்சி சித்திரிக்கப்பட்டிருந்தது. அப்போது ஒருவருக்கு காலில் காயமும் மற்றவருக்கு மாரடைப்பும் ஏற்பட்டதாக பாவனை செய்யப் பட்டது. கரையோரக் காவல் படையின் அவசரகால மீட்புக் குழு வின் அதிகாரிகள், சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அதிகாரிகள், சிக்லாப் சமூக அவ சரகால மீட்புக்குழுவின் தொண் டூழியர்கள் ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பயங்கரவாதத் தாக்குதல் போன்ற அவசரகாலங்களில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள், மேம்படுத்தப்பட்ட முதல் உதவித் திறன்கள், இதயச் செயல்பாடு மீட்பு தொழில்நுட்பம் போன்றவற்றைத் தொண்டூழியர்கள் பாவனைப் பயிற்சியின்போது செயல்படுத்திக்காட்டினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்