புதிய ரயில்களில் கூடுதல் கதவுகள், மடக்கு இருக்கைகள், தானியக்க சோதனை முறை

புதிய ரயில்களில் கூடுதல் கதவுகள், மடக்கு இருக்கைகள், தானியக்க சோதனை முறை

1 mins read
b506e819-1220-4912-a251-27a099be08ca
-

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் தடம் அடுத்த ஆண்டில் படிப்படி யாகத் திறக்கப்படும்போது சொகு சான, பாதுகாப்பான பயணத்தை பயணிகள் அனுபவிக்கலாம். நடப் பில் உள்ள எம்ஆர்டி ரயில் பெட் டிகளின் ஒவ்வொரு பக்கமும் நான்கு கதவுகள் உள்ளன. ஆனால், புதிய தடத்தில் பயணத்தைத் தொடங்கும் ரயில் பெட்டிகளில் தலா ஐந்து கதவுகள் இருக்கும். ரயில் பயணிகள் சுலபமாகவும் வேகமாகவும் ஏறி, இறங்க வசதி ஏற்படுத்தித் தரும் பொருட்டு கூடுதல் கதவுகள் பொருத்தப்படுகின்றன.

தலா நான்கு பெட்டி களைக் கொண்ட 60 ரயில்களில் மடக்கும் இருக்கைகள் பொருத்தப் படும். உச்சநேர பயணத்தின்போது அதிகமானோர் நின்றுகொண்டு செல்ல அந்த ஏற்பாடு வசதி செய்து தரும். ஒவ்வொரு ரயிலிலும் பத்து வரிசைகள், அதாவது மொத்த இருக்கைகளில் 25 விழுக்காடு மடக்கு இருக்கைகளாக இருக் கும். இந்தப் புதிய அம்சங்கள் குறித்து போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வானிடம் விளக்கிக் காட்டப்பட்டது. மண்டாய் ரயில் பணிமனைக்கு அவர் வருகை புரிந்தபோது முதல் ரயிலை இயக்கி அவருக்கு விளக்கப்பட்டது. இந்த ரயில் பெட்டிகள் கடந்த மே மாதம் சீனாவிலிருந்து சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்டவை.

உச்சநேரப் பயணத்தின் போது அதிக பயணிகள் நின்றுகொண்டு செல்வதற்கு ஏதுவாக மொத்த இருக்கைகளில் கிட்டத்தட்ட 25% மடக்கு இருக்கைகளாக அமைக்கப் படுகின்றன. மொத்தம் 60 ரயில்களில் இந்த ஏற்பாடு இருக்கும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்