தாய்லாந்து: நம்பிக்கையுடன் களமிறங்கி சாதித்த மீட்புக் குழு

1 mins read
f2bb17ff-26eb-40da-bcf7-5630ef0f70b6
-

தாய்லாந்தின் சியாங் ராய் மாநிலத்தில் வெள்ளம் சூழ்ந்த குகையிலிருந்து 13 பேரை அனைத்துலகக் குழு வெற்றி கரமாக மீட்டது. அந்தக் குழு பல முடிவுகளை ஒன் றுக்கு இரண்டு முறை யோசித்து எடுக்கவேண்டி இருந்ததாக மீட்புக் குழு தலைவர் நரோங்சாக் நேற்று கூறினார். எல்லாரும் மீட்கப்பட்டதற்கு அடுத்த நாளான நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சியாங் ராய் மாநிலத்தின் முன்னாள் ஆளுநரான அவர், "குகைக்குள் குறுகிய வழிகள் ஊடாகவும் சகதியாக இருந்த தண்ணீரைக் கடந்தும் துணிச்சலாகச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அதற்கு முன்னதாக அவர்கள் நம்பிக் கையை இழக்காமல் அந்தச் செயலில் ஈடுபட வேண்டிய சூழல் இருந்தது," என்று தெரிவித்தார். "இந்த நெருக்கடியில் ஒன்றுக்கு இரண்டு தடவை யோசித்து எல்லா முடிவு களையும் எடுக்கவேண்டி இருந்தது. பாதுகாப்புதான் மிக முக்கியம். முதலில் நம்பிக்கை தேவைப்பட்டது," என்று அவர் கூறினார்.

குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறார் அனைவரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் காணொளி நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது திரையிட்டுக் காட்டப்பட்டது. அவர்கள் எல்லாரும் உற்சாகமான மனநிலையுடனும் நம்பிக்கையுடனும் இருந்ததைக் காணொளி காட்டியது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்