சமூகப் பிரச்சினைகளுக்கு முழுமையான உதவி தேவை

சமூகப் பிரச்சினைகளுக்கு முழுமையான உதவி தேவை

1 mins read
ad46d4d1-d882-4059-a78c-777b481094ba
-

ஏற்றத்தாழ்வு போன்ற சமுதாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நிதி உதவி மட்டும் போதாது என பிரதமர் அலு வலக அமைச்சர் இந்திராணி ராஜா கூறியுள்ளார். சமூகக் கட்டமைப்பை உரு வாக்கி மக்களுக்குத் தேவை யான உதவிகளையும் ஆதரவை யும் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே அளிப்பது மிக வும் முக்கியம் என்றார் அவர். செம்பவாங் குழுத்தொகுதி யின் அமைச்சர்நிலை சந்திப் பின்போது நேற்று கம்போங் அட்மிரல்டி உணவங்காடி நிலை யத்தில் பொதுமக்களைச் சந் தித்த பிறகு செய்தியாளர்களிடம் இந்தக் கருத்தைக் கூறினார் குமாரி இந்திராணி.

உணவங்காடி நிலையத்தில் இருந்த அந்தப் பகுதி குடி யிருப்புவாசிகளைச் சந்தித்து அவர்களுடன் உரையாடினார் அவர். அமைச்சர் இந்திராணி ராஜாவுடன் உரையாடிய சிங்கப்பூர் பலதுறைத் தொழிற் கல்லூரி மாணவர் முகம்மது அஸஹாரி அப்துல் ரசாக், 37, பிரச்சினைகளில் இருப்போரு டன் சில வேளைகளில் நட்பா கப் பேசுவது, ஆதரவாக இருப் பதே பெரிய உதவி என்றார்.

அமைச்சர்கள் இந்திராணி ராஜா, டாக்டர் கோ போ கூன் (நிற்பவர்கள் இடமிருந்து), சிம் ஆன் (வலக்கோடியில் அமர்ந்திருப்பவர்) ஆகியோர் அமைச்சர்நிலை சந்திப்பில் கலந்துகொண்டு மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்