உணவு விரயத்துக்கு எதிரான இயக்கம்: 65 தொடக்கப்பள்ளிகள் இவ்வாண்டு பங்கேற்பு

உணவு விரயத்துக்கு எதிரான இயக்கம்: 65 தொடக்கப்பள்ளிகள் இவ்வாண்டு பங்கேற்பு

1 mins read
e63b1e78-f027-4c43-a90b-a929481670d2
-

உணவை விரயமாக்குவதற்கு எதிரான 'கிளீன் பிளேட்' (Clean Plate) இயக்கத்தில் இவ்வாண்டு தொடக்கப்பள்ளிகளும் உணவங் காடி நிலையங்களும் பங்கேற் கின்றன. ஆகஸ்ட் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 65 தொடக்கப்பள்ளிகள் இந்த இயக் கத்தில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு பள்ளியையும் சேர்ந்த 1,000 மாணவர்களுக்கு இயக்கத்தின்வழி உணவு விரயத் தினால் ஏற்படும் சுற்றுப்புற, சமுதாய தாக்கம் பற்றிய விழிப் புணர்வு ஏற்படும். அத்துடன் முதன்முறையாக இவ்வாண்டு அக்டோபர் மாதத்திலிருந்து உணவங்காடி நிலையங்களுக்கும் இந்த இயக்கம் விரிவுபடுத்தப் படவிருக்கிறது.

கொங் ஹூவா பள்ளியில் இயக்கத்தைத் தொடங்கி வைத்த 'ஃபூட் ஃபிரம் த ஹாட்' (Food from the Heart) தொண்டூழியக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி திருவாட்டி சிம் பீ ஹியா நேற்று இதனைத் தெரிவித்தார். உணவங்காடி நிலையங்கள், நிறுவனங்கள் என இயக்கத்தைத் தேசிய அளவில் செயல்படுத்துவது குறித்த திட்டம் உள்ளது என்றார் அவர். கடந்த 2013இல் இவ்வியக்கம் தொடங்கியபோது ஐந்து பள்ளிகள் பங்கேற்றன.

தொண்டூழியர் டியோ சார்லின் (இடமிருந்து இரண்டாவது) இயக்கத்தில் பங்கேற்ற கொங் ஹூவா பள்ளி மாணவர்களுக்கு பேனாவும் ஒட்டுவில்லையும் தருகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்