கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி

கேரளாவிற்கு ரூ.500 கோடி இடைக்கால நிவாரண நிதி

2 mins read
b5d810ae-7f30-49b9-afef-722ba2ea6ccb
-
Google News Preferred Icon

நூறாண்டுகளில் இல்லாத மழை வெள்ள பாதிப்பால் அவதிப்பட்டு வரும் கேரள மாநி லத்திற்கு இடைக்காலமாக 500 கோடி ரூபாய் (S$98.2 மில்லியன்) நிவாரண நிதி வழங்கப் படும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

கேரளாவைப் புரட்டியெடுத்து வரும் இயற்கைப் பேரிடரில் சிக்கி இதுவரை 300க் கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்; பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றன; லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.

முப்படை வீரர்களும் இடையறாத மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து ஹெலிகாப்டர்கள், படகுகள் மூலம் பலர் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றுக் காலை கொச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டார் பிரதமர் மோடி. முன்னதாக, அவர் வெள்ள சேதம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆளுநர் சதாசிவம் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, முதற்கட்ட மதிப்பீட்டின்படி வெள்ளத்தால் ரூ.19,512 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் உடனடியாக ரூ.2,000 கோடி நிவாரண நிதி வழங்கவேண்டும் என்றும் அவரிடம் கோரிக்கை விடுத்ததாக முதல்வர் தெரிவித்தார்.

இதையடுத்து, உடனடியாக ரூ.500 கோடி நிவாரண நிதி வழங்க பிரதமர் உத்தரவிட்டார். அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தா ருக்குத் தலா 200,000 ரூபாயும் பலத்த காய மடைந்தவர்களுக்குத் தலா 50,000 ரூபாயும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப் படும் என்றும் அவர் அறிவித்தார்.

"இந்தத் துயரமான சூழ்நிலையிலும் கேரள மக்களின் மனந்தளரா போராட்ட உணர்வைப் பாராட்டுகிறேன்," என்று தமது டுவிட்டர் பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளார். முன்னதாக, கேரள வெள்ளத்தை தேசியப் பேரிடராக அறிவிக்கவேண்டும் என்று காங் கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரத மருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆலுவாவில் வெள்ளத்தால் கடந்த சில நாட்களாக வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வந்த நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டதை அடுத்து ஆனந்தக் கண்ணீர் உகுக்கும் பெண்மணிகள். படம்: ராய்ட்டர்ஸ்