'அதிவேக ரயில் திட்டத்தை ஒத்திவைப்பது குறித்த பேச்சுவார்த்தை தொடர்கிறது'

'அதிவேக ரயில் திட்டத்தை ஒத்திவைப்பது குறித்த பேச்சுவார்த்தை தொடர்கிறது'

1 mins read
1fdf2867-0d00-45e7-8e11-16c941580c3e
-
Google News Preferred Icon

சிங்கப்பூர் - கோலாலம்பூர் இடை யிலான அதிவேக ரயில் திட் டத்தை ஒத்திவைக்கும் மலேசி யாவின் வேண்டுகோள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. "சிங்கப்பூரும் மலேசியாவும் பரஸ்பரம் உடன்பாட்டின் அடிப் படையில் மாற்றினாலன்றி, அதி வேக ரயில் இருதரப்பு உடன்பாடு நடப்பில் இருக்கும்," என்று அமைச்சு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது. அதிவேக ரயில் திட்டம் குறித்து சிங்கப்பூரும் மலேசியா வும் இணக் கம் கண்டுள்ளதாக தகவல்கள் அறிந்த வட்டாரங்கள் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. அதற்கு அமைச்சு பதிலளித்துள்ளது. இருநாட்டு அமைச்சர்களும் மூத்த அதிகாரிகளும் நேற்று முன்தினம் நடத்திய சந்திப்பைத் தொடர்ந்து இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது இருதரப்பும் ஒத்திவைப்பு தொடர் பான விதிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் கூறியதாக அந்நாளிதழ் செய்தி கூறியது.