'ஹோப் கலெக்டிவ்' திட்டத்தில் சேரும் உதவி அமைப்புகள்

'ஹோப் கலெக்டிவ்' திட்டத்தில் சேரும் உதவி அமைப்புகள்

1 mins read
880d0333-811a-4c82-8ce0-969135ccde5c
-
Google News Preferred Icon

அங் மோ கியோ வட்டாரத்திலுள்ள கெபுன் பாரு பகுதியில் வசதி குறைந்த குடியிருப்பாளர்களுக்கு 'ஹோப் கலெக்டிவ்' என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொண்டூழியர்கள், உதவி நிறு வனங்கள், அரசாங்க அமைப்புகள் ஆகியவற்றைக் கூட்டு முயற்சி களுக்காக அந்தத் திட்டம் ஒன்று திரட்டுகிறது. பிரதமர் லீ சியன் லூங்கும் நீ சூன் குழுத்தொகுதியின் அடித் தள அமைப்புகளுக்கு ஆலோச கராக உள்ள திரு ஹென்ரி குவெக்கும் 'தி ஹோப் கலெக்டிவ்' (டிஹெச்ஸி) திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தனர். கெபுன் பாரு குடிமக்களின் ஆலோசனைக் குழு, இந்த புதிய முயற்சியை வழிநடத்துவதாக திரு குவெக் தெரிவித்தார். இந்தத் திட்டத்தில் நிபுணர்களும் தொண்டூழி யர்களும் இணைந்து வசதி குறைந்தோரின் தேவைகளை அடையாளம் கண்டு உதவுவர் என அவர் கூறினார். தனிமையில் உள்ள முதியவர்கள், தேவையுள்ள இளம் குடும்பங்களுக்கு நீண்ட கால ஆலோசனைத் திட்டம், வசதி குறைந்த பிள்ளைகளுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டம் ஆகியவை நடப்புக்கு வரவுள்ளன.

புதுப்பிக்கப்பட்ட கெபுன் பாரு சமூக மன்றத்தில் புதிய விளை யாட்டு வசதியைப் பயன் படுத்துகிறார் பிரதமர் லீ சியன் லூங்.