புகழ்பெற்ற சைவத் திருத்தலங் களில் ஒன்றான மலேசியாவின் பத்துமலை அருள்மிகு சுப்பிர மணியர் ஆலயத்திற்குச் செல்லும் 272 படிக்கட்டுகளுக்கும் வண்ணம் பூசியது அந்த ஆலய நிர்வாகத் திற்குப் பிரச்சினையை ஏற்படுத்த லாம் எனக் கூறப்படுகிறது. ஆலயத்தின் குடமுழுக்கு விழா நாளை நடைபெறவுள்ள நிலையில், புதிய நுழைவுக் கோபுரங்கள், புதிய தரையோடுகள், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட புதுப்பிப்புப் பணிகள் பத்துமலையில் உள்ள 13 ஆலயங்களிலும் மேற்கொள்ளப் பட்டன. இந்நிலையில், தேசிய மரபுடை மைத் துறையிடமிருந்து அனுமதி பெறப்படாமல் அப்பணிகள் மேற் கொள்ளப்பட்டதாகப் புகார் எழுந் துள்ளது. அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம் தேசிய மரபுடைமைத் தலங்களுள் ஒன்றாக தேசிய மரபு டைமைப் பதிவேட்டில் இடம்பெற் றுள்ளது.
அதனால் மரபுடைமைத் துறையின் ஒப்புதலுக்குப் பிறகே ஆலயத்தில் எந்தவொரு மேம் பாட்டுப் பணியும் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு மரபுடைமைத் தலம் தனது சிறப்புக்குரிய மரபுடைமை அடை யாளங்களைப் பேணிக் காக்காமல் போகும் பட்சத்தில், அது மரபுடை மைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று தேசிய மரபுடைமைத் துறையின் விதிகள் சொல்வதாக சமூக ஆர்வலரும் செந்தோசா சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஜி.குணராஜ் தெரிவித்தார். இதற்கிடையே, தேவையான அனுமதிகளைப் பெற்ற பின்னரே புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள் ளப்பட்டன என்று பத்துமலை ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய தேவஸ் தானக் குழுவின் தலைவர் ஆர். நடராஜா கூறியுள்ளார். "வண்ணம் பூச எந்த அனு மதியும் தேவையில்லை. புதுப்பிப்புப் பணிகளுக்கு செலாயாங் நகராட்சி மன்றத்திடம் இருந்து அனுமதி பெற்றோம்," என்றார் அவர்.
வானவில்போல வண்ணங்களில் ஜொலிக்கும் பத்துமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்தின் படிக்கட்டுகள் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. படம்: தி ஸ்டார்

