முதியோருடன் கலந்துறவாடி மகிழ்ந்த அதிபர்

முதியோருடன் கலந்துறவாடி மகிழ்ந்த அதிபர்

1 mins read
7c122f76-b668-4950-aa12-5d85030bca24
-
Google News Preferred Icon

அதிபர் ஹலிமா யாக்கோப் நேற்று செயிண்ட் ஜான்ஸ் முதியோர் இல்லத்துக்கு வருகையளித்தார். அங்கு அவர் முதியோருடன் கலந்துறவாடியதுடன் அவர்களுக்கான நடவடிக்கைகள் பற்றியும் கேட்டறிந்தார். அதிபர் வாழ்க்கை குறித்து திருவாட்டி ஹலிமாவிடம் 66க்கும் 91 வயதுக்கும் இடைப்பட்ட எட்டு முதியவர்கள் கேள்விகளைக் கேட்டனர். அதற்கு அவர் ஆர்வத்துடன் பதிலளித்தார். அவர்களுடன் விளையாட்டுகளிலும் ஈடுபட்ட திருவாட்டி ஹலிமா, முதியோருடன் புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார். முதியவர்கள் அறுவரின் பிறந்தநாட்களையும் திருவாட்டி ஹலிமா அவர்களுடன் கேக் வெட்டி சேர்ந்து கொண்டாடினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்