ஒருமுறை வழங்கப்படும் சிறப்பு 'எஸ்ஜி' போனசுக்கு கிட்டத்தட்ட 2.8 மில்லியன் சிங்கப்பூரர்கள் தகுதி பெற்றிருக்கிறார்கள். இவர் களுக்கு 300 வெள்ளி வரை போனசாகக் கிடைக்கும். தகுதி பெற்றுள்ள 21 வயதுக்கு மேற் பட்ட சிங்கப்பூரர்களுக்கு, இது குறித்து வரும் செவ்வாய்க்கிழமை முதல் கடிதம் அனுப்பப்படும் என்று நிதியமைச்சு தெரிவித்தது. தகுதிபெற்றோரில் மொத்தம் $700 மில்லியனை டிசம்பர் மாதத் திற்குள் அரசாங்கம் வழங்கும். குடிமக்கள் தங்களது சிங்பாசைப் பயன் படுத்தி தங்களுக்கு எவ் வளவு தொகை கிடைக்கும் என்பதை 'எஸ்ஜி' போனஸ் இணையப் பக்கத்தில் வரும் செவ்வாய்க் கிழமை முதல் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று நிதியமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது. சிங்பாசுடன் தங் களது கைத் தொலைப்பேசி எண்ணைப் பதிவு செய்திருப்பவர் களுக்குக் குறுந்தகவல் அனுப் பப்படும். 2017 நிதியாண்டில் சிங்கப்பூர் $9.6 பில்லியன், அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1% லாபம் ஈட்டி யதாக இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் நிதிய அமைச்சர் ஹெங் சுவீ கியட் தெரிவித்தார். இது ஓராண்டுக்கு முன்னர் கணிக்கப்பட்ட $1.9 பில்லியனைவிட அதிகம்.
மக்களுக்கு இந்த லாபத்தில் ஒரு பகுதியை அளிப்பதாக நிதி மைச்சர் தெரிவித்திருந்தார். பொருள் சேவை வரி பற்றுச்சீட்டு, சேவைப் பராமரிப்பு கட்டண மானியம் ஆகியவற்றுக்கும் மேலாக இந்த சிறப்பு எஸ்ஜி போனஸ் வழங்கப்படுகிறது. நாட்டின் வளர்ச்சியை சிங்கப் பூரர்களுடன் பகிர்ந்துகொள்ளும் அரசாங் கத்தின் நீண்டகால கடப்பாட்டை இது காட்டுவதாக நிதியமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. 21 வயதும் அதற்கு மேற்பட்டவர்களும் அவர்களது வருமானத்தைப் பொறுத்து $300 வரை எஸ்ஜி போனசைப் பெறுவர். 2017ல் 28,000 வெள்ளியும் அதற்குக் குறைவாகவும் ஆண்டு வருமானம் பெற்றவர்களுக்கு $300 கிடைக்கும். $28,001 முதல் $100,000 வரை வருமானம் பெற் றவர்களுக்கு $200 கிடைக்கும். 2018-09-29 06:00:00 +0800

