சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான உதவி நிலையம்

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான உதவி நிலையம்

1 mins read
5776ba9e-c3cd-4f30-b3af-0ab8bce86863
-
Google News Preferred Icon

தொழில்நுட்பம் வர்த்தக, சமூக அளவில் செயல்முறைகளை மாற்றி வருகிறது என்றும் ஒட்டு மொத்த வர்த்தக சமூகமும், குறிப்பாக சிறிய, நடுத்தர நிறு வனங்கள் (எஸ்எம்இ) தொழில் நுட்ப மாற்றங்களைத் தழுவு வதில் முன்னிலையில் இருக்க வேண்டும் என்றும் தொடர்பு, தகவல் அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக் கும் அமைச்சருமான எஸ். ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் மன்றம் (சிக்கி) 'என்டர் பிரைஸ் சிங்கப்பூர்' அமைப்பின் ஆதரவுடன் லிட்டில் இந்தியா ஆர்க்கேடில் சிறிய, நடுத்தர நிறுவன நிலையத்தைத் திரு ஈஸ்வரன் நேற்று அதிகாரபூர்வ மாகத் திறந்துவைத்தார். "தகுந்த வர்த்தகத் திட்டங் களையும் வளங்களையும் பங் காளிகள் வழங்கினாலும், முதல் படியாக நிறுவனத் தலைவர்கள், நிலையத்தின் ஆலோசகர்கள் பரிந்துரைக்கும் திட்டங்களின் வழி எப்படித் தங்களது வர்த் தகத்தைப் பெருக்கலாம் என ஆழமாகச் சிந்தித்து செயலில் இறங்கவேண்டும்," என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

லிட்டில் இந்தியா ஆர்க்கேடில் சிறிய, நடுத்தர நிறுவன நிலையத்தைத் திறந்து வைக்கும் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் (இடது). உடன் 'சிக்கி' தலைவர் டாக்டர் டி.சந்துரு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்